ஆசிபெற திதி தர்பணம் செய்யும் ரகசியம்
Mahalaya Amavasai 2020. Atma siddhar telling the secret of Didi Darbhana to get the blessing of ancestors. முன்னோர்களின் ஆசி கிடைக்கும் மகாளய அமாவாசை 2020:திதி தர்ப்பணம் மறக்காமல் கொடுங்க. Atma siddhar lakshmi ammal Explain Mahalaya Amavasai 2020. மகாளய அமாவாசை தினத்தில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும். இன்றைய தினத்தில் கொடுக்கும் தானத்தினால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். தோஷங்கள் நீங்கி யோகங்கள் அதிகமாக கிடைக்கும். சுப காரியம் ஏற்படுவதில் இருந்த தடைகள் நீங்கி நல்லது நிறைய நடைபெறும். மகாளய அமாவாசை தினத்திலும் மகாளய பட்ச காலத்திலும் தானம் செய்வதினாலும் திதி கொடுப்பதனாலும் பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறலாம். ஒருவரது குடும்பத்தில் தீராத நோய்கள் இருக்கும், பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும், எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போகும், கடன் பிரச்சினை அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர், கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வரும் குடும்பத்தில் சண்டை சச்சரவு என தினம் தினம் குருச்ஷேத்திர போர்க்களமாக வீடு இருக்கும். இதற்குக் காரணம் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும். மகாளய பட்ச காலமான 14 நாட்கள் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள். அவர்கள் நம்முடன் தங்கியிருக்கும் இந்த நாட்களில் நாம் அவர்களின் பசியையும் தாகத்தையும் போக்காவிட்டால் அவர்கள் மனம் வேதனை அடையும். மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நினைவுபடுத்தவே தடைகள் பல ஏற்படுகிறது. எனவே மற்ற அமாவாசை நாட்களில் செய்ய முடியாமல் போனாலும் மகாளய பட்ச காலங்களிலும் மகாளய அமாவாசை அன்று பித்ருகடன் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்வார்கள். எத்தகைய தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம். மேலும் விவரங்களுக்கு வீடியோ பாருங்கள்.
- Category: Uncategorized
- Duration: 12:25
- Date: 3 years ago
- Tags: no-tag
0 Comments